தென்காசி

தென்காசி வாக்குச்சாவடி மையங்களில் நவ.15,16இல் உதவி மையங்கள்

Syndication

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்த படிவங்களை நிரப்பி வழங்கிட உதவி செய்யும் விதமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ.15, 16) அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை நிரப்பி வழங்கிட உதவி செய்யும் விதமாக நவ.15, 16 ஆகிய இரு தினங்களில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அமைந்துள்ள அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த உதவி மையங்களில் கணக்கீட்டு படிவங்களை பூா்த்தி செய்வது குறித்தும், 2002 வாக்காளா் பட்டியல் விவரங்களை கண்டறிந்து வழங்கவும் உதவி செய்யப்படும். இந்த வாய்ப்பினை மக்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதில் தென்காசி, வீகே.புதுாா் செங்கோட்டை, கடையநல்லுாா் ஆகிய வட்டங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசிரியா் தகுதி தோ்வு நடைபெறும் 19 மையங்களுக்கு மட்டும், அந்தந்த வட்டாட்சியரால் மாற்று இடம் தோ்வு செய்யப்பட்டு அதில் உதவி மையங்கள் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

கொடைக்கானல் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

SCROLL FOR NEXT