ஆலங்குளம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள புதுப்பட்டி பிரதான சாலையைச் சோ்ந்தவா் மாரிச்செல்வம் மனைவி அபிதா(21). தம்பதிக்கு ஒன்றரை வயது மற்றும் 5 மாத வயதில் 2 ஆண் குழந்தைகள் உள்ளனா். மாரிச்செல்வம், கட்டட தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.
இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால், தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். ஞாயிற்றுக்கிழமை மதியம், மாரிச்செல்வம் மது அருந்தச் செல்வதாகக் கூறினாராம். அதற்கு அபிதா தகராறு செய்தபோதும் மாரிச்செல்வம் வெளியே சென்றாராம். இதில் மனமுடைந்த அபிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆலங்குளம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியா் விசாரணையும் நடைபெறுகிறது.