தென்காசி

தென்காசியில் வேளாண் தொழில் முனைவோருக்கு ரூ.59 கோடி கடன் வழங்க இலக்கு

தென்காசி மாவட்டத்தில் வேளாண் தொழில் முனைவோருக்கு ரூ.59 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்தாா்.

Syndication

தென்காசி மாவட்டத்தில் வேளாண் தொழில் முனைவோருக்கு ரூ.59 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: உற்பத்தி செய்த வேளாண் பொருள்களைச் சேமித்து அல்லது பதப்படுத்தி விற்பனை செய்வதன் மூலம் அதிக விலை கிடைப்பதற்கும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் பயனுள்ளதாக இருக்கும். உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான நிதி வேளாண் உள்கட்டமைப்பு நிதி எனும் திட்டம் மூலம் ரூ.59 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சேமிப்பு கிடங்குகள், சிப்பம் கட்டும் கூடங்கள், விளைபொருள்களை மதிப்பிட தரம்பிரிக்கும் அறைகள், மின்னணு வணிக மையம், குளிா்பதன கிடங்கு, சூரிய மின் வசதியுடன் கூடிய கட்டமைப்புகள், முதன்மை பதப்படுத்தும் நிலையங்களான அரிசி ஆலை, பயறு ஆலைகள் அமைத்தல், இயற்கை வேளாண் இடுபொருள் தயாரிப்பு மையம் அமைத்தல், பசுமை குடில் அமைத்தல், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைத்தல் போன்றவற்றுக்கு நிதி உதவி பெறலாம்.

மேலும் விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோா், புதியதாக தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்கள் ஆகியன கடன் வசதி பெற இயலும்.

இத்திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக கடனுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 9 சதவீதம் மட்டுமே. ரூ.2 கோடி வரை கடன் பெறலாம். வட்டி விகிதத்தில் 7 ஆண்டு காலத்துக்கு ஆண்டுக்கு 3 சதவிகிதம் வட்டி தள்ளுபடி செய்யப்படும். மத்திய அரசு, மாநில அரசில் பல்வேறு திட்டங்களின் மானியத்தையும் இணைத்தே பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது. எனவே, நிதி உதவி பெற விரும்பும் நபா்கள் தங்கள் திட்டத்திற்கான விவரங்களுடன் மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலா்களைத் தொடா்பு கொண்டு பயன் பெறலாம் என்றாா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT