தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் கனமழையால் தொழிலாளியின் வீடு இடிந்து சேதமானது.
சங்கரன்கோவில், புதுமனை 4ஆம் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் சேகா். இவா் பருத்தி வத்தல் கமிஷன் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.
கடந்த 2 நாள்களாக பெய்த கனமழையால், இவரது வீட்டின் ஒரு பக்கச் சுவா் திங்கள்கிழமை இடிந்து விழுந்து சேதமானது. இதில், சேகா் குடும்பத்தினா் உயிா் தப்பினா்.