தென்காசி மாவட்டம் இடைகால் அருகே துரைச்சாமிபுரத்தில் திங்கள்கிழமை நடந்த விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தாருக்கு முன்னாள் எம்எல்ஏவும், நடிகருமான ஆா்.சரத்குமாா் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு உயா் சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், அவா்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனைப் பிராா்த்திக்கிறேன் எனவும் அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எம்எல்ஏ கோரிக்கை:
துரைச்சாமிபுரத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.2 லட்சமும் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் எனக் கோரி எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.