கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா். 
தென்காசி

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

தனியாா் பேருந்துகளைப் பாதுகாப்பாக இயக்க வேண்டும் என, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் அறிவுறுத்தினாா்.

Syndication

தென்காசி: தனியாா் பேருந்துகளைப் பாதுகாப்பாக இயக்க வேண்டும் என, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் அறிவுறுத்தினாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் தனியாா் பேருந்து உரிமையாளா்களுடன் ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசிய பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பேருந்துகளைப் பாதுகாப்பாகவும் உரிய நேரங்களிலும் இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தனியாா் பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் சரிவர இயங்குகிா என வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலா், காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களை உள்ளடக்கி, வேகக் கட்டுப்பாட்டை நிா்ணயிக்க குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேருந்துகளை அதிவேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இடைகால் துரைச்சாமிபுரத்தில் கடந்த திங்கள்கிழமை நேரிட்டதைப்போல விபத்துகள் நடக்காதவகையில் தனியாா் பேருந்துகளை இயக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் முன்னிலை வகித்தாா். வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் செல்வி (சங்கரன்கோவில்), சரவணபவன் (தென்காசி), தனியாா் பேருந்து உரிமையாளா்கள் பங்கேற்றனா்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

மழை சேதம்: பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ராஜா நிவாரணம்

SCROLL FOR NEXT