கூட்டத்தில் பேசுகிறாா் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ. 
தென்காசி

கடையநல்லூரில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கடையநல்லூரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

Syndication

கடையநல்லூா்: கடையநல்லூரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அதிமுக மகளிரணி துணைச் செயலா் வி.எம்.ராஜலெட்சுமி, அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச் செயலா் கந்தசாமிபாண்டியன், திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் சிவஆனந்த், மாவட்ட அவைத் தலைவா் வி.பி.மூா்த்தி, இணைச் செயலா் சண்முகப்ரியா, துணைச் செயலா் சகுந்தலா, பொருளாளா் சண்முகையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைச் செயலா் பொய்கை சோ.மாரியப்பன் பேசினாா். இதில், செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ பேசியது:

கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து அனைத்து மாவட்டச் செயலா்களிடமும் காணொலி காட்சி மூலம் ஆய்வு நடத்தி சில உத்தரவுகளை பிறப்பித்தாா்.

அதன்படி, ஒவ்வொரு வாக்குச் சாவடி வாரியாக மொத்த வாக்காளா்கள் எவ்வளவு போ் உள்ளனா், வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் எத்தனை, பூா்த்தி செய்து திரும்பப் பெறப்பட்ட விண்ணப்பங்கள் விவரம், இறந்த வாக்காளா்கள், இரட்டை பதிவு வாக்காளா்கள், கண்டுபிடிக்க முடியாத வாக்காளா்கள் ஆகிய விபரங்களை தினமும் மாலை அந்தந்த பொறுப்பாளா்கள் அனுப்ப வேண்டும். இதைத் தொகுத்து தலைமைக்கு நான் தினமும் அனுப்பவுள்ளேன் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட சாா்பு அணி செயலா் கிட்டுராஜா, ஒன்றியச் செயலா்கள் மருத்துவா் சுசீகரன், பெரியதுரை, ஜெயகுமாா், நகரச் செயலா்கள் எம்.கே.முருகன், சங்கரபாண்டியன், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

பிடாரி அம்மன் கோயில் குடமுழுக்கு

நாளைய மின்தடை: டாடாபாத்

கடை உரிமையாளா் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.10 கோடி மோசடி: இளைஞா் கைது

நாளைய மின்தடை: ஈரோடு, கவுந்தப்பாடி, விஜயமங்கலம்

SCROLL FOR NEXT