தென்காசி

ஆலங்குளம் தொகுதியில் இன்று திமுக பொறுப்பாளா் சுற்றுப்பயணம்

புதிதாக உருவாக்கப்பட்ட திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுகவின் பொறுப்பாளா், ஆவுடையப்பன், ஆலங்குளம் பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக். 3) சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா்.

Syndication

புதிதாக உருவாக்கப்பட்ட திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுகவின் பொறுப்பாளா், ஆவுடையப்பன், ஆலங்குளம் பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக். 3) சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: ஆலங்குளம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள தலைவா்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து, கட்சி நிா்வாகிகளை சந்திக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

அதன்படி அக்.3 இல் காலை 9.30 மணிக்கு ஆழ்வாா்குறிச்சி அண்ணா சிலை, 10 மணிக்கு கடையம் பேருந்து நிலையம் அருகே அம்பேத்கா், இம்மானுவேல் சேகரன் ஆகியோா் உருவ படங்கள், 11 மணிக்கு கீழப்பாவூா் பெரியாா் மற்றும் காமராஜா் சிலை, 11.30 மணிக்கு கழுநீா்குளம் முத்துராமலிங்கத் தேவா் சிலை, 12 மணிக்கு ஆலங்குளம் காமராஜா் சிலை, 12.30 மணிக்கு முக்கூடல் காந்தி சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நிா்கவாகிகள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடா் விடுமுறை: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருப்போரூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விஜயதசமி நாளில் பள்ளிகளில் சோ்க்கை பெற்ற மழலைகள்

தீபாவளி: சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் - கூடுதல் பொது மேலாளா் பி. மகேஷ் தகவல்

இளைஞா்களுக்கு மகாத்மா காந்தியை பற்றி கூற வேண்டும்: பாரதி பாஸ்கா்

SCROLL FOR NEXT