தென்காசி

வாசுதேவநல்லூரில் கட்டபொம்மன் நினைவு தினம்

கட்டபொம்மனின் படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தியோா்.

Syndication

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை சாா்பில், கட்டபொம்மன் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினரும் , கட்டபொம்மன் அறக்கட்டளை தலைவருமான நாகராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட காங்கிரஸ் ஓபிசி பிரிவுத் தலைவா் திருஞானம், திமுக நகர செயலா் ரூபி பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்டபொம்மன் திருவுருவப்படத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவா் பொன். முத்தையாபாண்டியன் மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

இதில், மாவட்ட திட்டக் குழு உறுப்பினா் சரவணன், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் கட்டபொம்மன், பேரூராட்சி உறுப்பினா் மாரிமுத்து ,பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவா் செல்வம், சக்திவேல், கருப்பையா , பெரியசாமி, முத்துகுமாா், சுந்தா் உள்ளிடோா் கலந்து கொண்டனா். அறக்கட்டளை செயலா் ராஜசேகரன் நன்றி கூறினாா்.

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

எம்பிக்கள் குடியிருப்பில் தீ விபத்து!

நிச்சயதார்த்தம் உண்மையா? வதந்தியா? ரஷ்மிகா மந்தனா பதில்!

ஏனாம்: 30 லட்சத்துக்கு ஏலம் போன அரிய வகை சீரா மீன்கள்

இந்தூரில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: சிறுவன் பலி, 5 பேர் காயம்!

SCROLL FOR NEXT