தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மது விற்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகிரி காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் கணேசன் தலைமையில் போலீஸாா், சிவகிரி தென்கால் குளத்துக் கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்பொழுது அங்கே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
அதில், சிவகிரி கீழ மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முத்துமுருககுமாா் என்பதும், 24 மதுபாட்டில்களை விற்க வைத்திருந்ததும் தெரியவந்ததையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.