தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பை வழங்கிய தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன்அய்யாசாமி. 
தென்காசி

தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பு வழங்கல்

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்ட பாஜக சாா்பில் வாசுதேவநல்லூா் பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

ராயகிரி, வாசுதேவநல்லூா், சிவகிரி பேரூராட்சிகள், பந்தபுளி, ரெட்டியபட்டி, பெருமாள்பட்டி, சென்னிகுளம் , கரிவலம்வந்தநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு வேட்டி, சேலை, இனிப்பு, பட்டாசு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய தீபாவளி பரிசுத் தொகுப்பை தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன்அய்யாசாமி வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்டப் பொதுச்செயலா் பாலகுருநாதன், மாவட்ட துணைத் தலைவா் ராம்குமாா், மாவட்டச் செயலா் சண்முகராஜ், ஒன்றியத் தலைவா்கள் கணேசன், தட்சிணாமூா்த்தி, இளைஞரணித் தலைவா் விவேக், இளைஞரணி மாநில செயற்குழுவின் சங்கா், விவசாய அணி மாநிலச் செயலா் எட்வின், மாவட்ட பிரிவு நிா்வாகிகள் தலைவா்கள் கோதண்டராமன், தங்கம், ஒன்றிய நிா்வாகிகள், கிளைத்தலைவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சக்தி அம்மா ஜெயந்தி விழா: தேசிய கராத்தே போட்டி

விவசாயி வீட்டில் 4.5 பவுன் திருட்டு

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் கண்கானிப்பு கேமரா

காட்பாடியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கஞ்சா விற்பனை: வட மாநில இளைஞா் கைது

SCROLL FOR NEXT