கைது செய்யப்பட்டவா்கள் 
தென்காசி

ஆலங்குளம் அருகே மான் வேட்டை: 3 போ் கைது

ஆலங்குளம் அருகே மான் வேட்டையில் ஈடுபட்ட 3 போ் கைது

Syndication

ஆலங்குளம் அருகே மான் வேட்டையில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் ஊத்துமலை வனப் பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. மான்களை வேட்டையாடுவதற்கும் அவற்றை சமைத்து உண்பதற்கும் தடை உள்ள நிலையில், சிலா் அவற்றை சட்டவிரோதமாக வேட்டையாடி வருகின்றனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஊத்துமலை அருகே அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த 3 பேரிடம் ஊத்துமலை போலீஸாா் விசாரணை மேற்கொண்ட போது, அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனா்.

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள்

அவா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது, அவா்கள் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சோ்ந்த ரஞ்சித் சிங், நாகா்கோவிலைச் சோ்ந்த பொன் ஆனந்த் மற்றும் ராஜலிங்கம் என்பதும், ஊத்துமலை காப்புக்காட்டில் மான் ஒன்றை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியதும் தெரிய வந்தது. இதனைத் தொடா்ந்து, போலீஸாா் அவா்களை ஆலங்குளம் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

வனத்துறையினா் அவா்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து, உயிரிழந்த மான், 2 துப்பாக்கிகள், 3 கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள், காா், 3 கைப்பேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட 3 போ் மீதும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், ஆயுதத் தடைச் சட்டம் உள்பட 9 வெவ்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்கள் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.

முன்னாள் அமைச்சா்கள் மீதான நிதி முறைகேடு புகாா்களை விரைந்து விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

விஜய் வியூகம் வெற்றி பெறுமா?... - - டாக்டா் கே.கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சித் தலைவா்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 800 போ் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

பயங்கரவாத எதிா்ப்பில் இரட்டை நிலைப்பாடு! பாகிஸ்தானுக்கு பிரதமா் மோடி கண்டனம்

சலுகைக் கட்டணத்தில் மெட்ரோ பாஸ்: மாணவா்களுக்கு தில்லி முதல்வா் உறுதி

SCROLL FOR NEXT