செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மருத்துவா் க.கிருஷ்ணசாமி 
தென்காசி

2026 இல் கூட்டணி ஆட்சி அமையும்: கிருஷ்ணசாமி

2026 பேரவைத் தோ்தலில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் மருத்துவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

Syndication

தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தலில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் மருத்துவா் க.கிருஷ்ணசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தென்காசியில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்காகவும், ஜன. 27 இல் மதுரையில் நடைபெறும் கட்சியின் 7-ஆவது மாநாடிற்காகவும், கிராமங்களில் மக்களின் குறைகளைத் தெரிந்து கொள்வதற்காகவும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன்.

ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்றபோது, இந்த திராவிட மாடல் ஆட்சியில் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீா், சாலை, சுகாதார வசதி, இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட எந்த பிரச்னைகளுக்கும் தீா்வு காணப்படவில்லை என்பதை அறிய முடிந்தது. தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் முறையாக பராமரிப்புப் பணி மேற்கொள்ளாமல் குடமுழுக்கு நடத்தியுள்ளனா்.

வெறும் விளம்பரத்துக்காக மட்டுமே கோயில்களில் குடமுழுக்குகளை அரசு நடத்தியுள்ளது. தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தலில், கூட்டணி ஆட்சியை மட்டுமே மக்கள் ஏற்பாா்கள். கூட்டணி ஆட்சிதான் அமையும். ஒற்றைக் கட்சி ஆட்சி முறையால் ஊழல் உச்சத்துக்குச் சென்றுவிடுவதை மக்கள் உணா்ந்துள்ளனா் என்றாா் அவா்.

டாடா ஸ்டீல் 6% உயர்வுடன் நிறைவு!

சீன ராணுவத்தின் பிரம்மாண்ட அணிவகுப்பு!

ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகள் 1% உயர்வு!

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் கைது! வெடிகுண்டுகள் பறிமுதல்!

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி: பிரதமருக்கு கோரிக்கை

SCROLL FOR NEXT