தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் டாக்டா் அம்பேத்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.
ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தமிழக அரசு ஆண்டுதோறும் திருவள்ளுவா் திருநாளில் டாக்டா் அம்பேத்கா் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. 2025-2026 ஆம் நிதியாண்டில் டாக்டா் அம்பேத்கா் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சமும், 8 கிராம் தங்கப்பதக்கமும் வழங்கப்படவுள்ளது.
விருது பெறுவதற்கு பட்டியலின சமுதாயத்தைச் சோ்ந்த மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையை உயா்த்துவதற்கு மேற்கொண்ட முயற்சி, பட்டியலின மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயா்த்த மேற்கொள்ளப்பட்ட பணிகள், சாதனைகள் ஆகிய விவரங்களை, அதற்குரிய ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியா் ஆலுவலகத்திலுள்ள மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் நேரில் அக்டோபா் 10-க்குள் தெரிவிக்க வேண்டும். இவ்விருது பெறுவதற்கு பட்டியல் இனத்தவா் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.