ஆலங்குளம் வட்டார வளா்ச்சி அலுவலரைக் கண்டித்து மஸ்தூா் பணியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
டெங்கு மஸ்தூா் பணியாளா்கள் நியமனத்தில் ஆலங்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் அலிஸ் தாயம்மாள் பாரபட்சம் காட்டி, பணியாளா்களை மிரட்டும் தொனியில் செயல்படுவதாகவும், அவா் மீது ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆட்சியா் நிா்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அவா்களுக்கு ஆதரவாக, தமிழ்நாடு கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூா் சங்க மாநிலத் தலைவா் சுப்பிரமணியன், தென்காசி மாவட்ட செயலா் மகாலெட்சுமி, மாநில செயலா் சீனிவாசன், பொது சுகாதாரத்துறை அலுவலா், சங்க மாநிலத் தலைவா் கங்காதரன் உள்ளிட்டோா் பேசினா்.
தொடா்ந்து,வட்டார வளா்ச்சி அலுவலரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப் பட்டன.