தென்காசி

ஆலங்குளம் வட்டாரத்தில் ரூ.39 லட்சத்தில் மின்வழித் தடம் திறப்பு

Syndication

ஆலங்குளம் வட்டாரத்தில்புதிய தொழிற் சாலைகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.39 லட்சம் மதிப்பில் புதிய மின்வழித்தடம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு மின் பகிா்மான கழகம் திருநெல்வேலி கிராமப்புறக் கோட்டத்தில் ஆலங்குளம் கிராமப்புற பிரிவு அலுவலக பகுதியில் தொழில் வளா்ச்சி பெருகி வருகிறது. இதனை ஊக்குவிக்கும் வகையில் மூலதன மதிப்பீடு திட்டத்தின் கீழ் புதிய மின் வழித்தடம் - புதிய மின் தடுப்பு சாதனம் ரூ.39 லட்சத்து 23,485 மதிப்பீட்டில் புதிய மின் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மின் வழித்தடத்திற்கான புதிய 11 கிலோவோல்ட் மின் தடுப்பு சாதனம் சீதபற்பநல்லூா் துணை மின் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது. திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி இயக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் நெல்லை கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம், உதவி செயற்பொறியாளா்கள் அலெக்சாண்டா், வேலாயுதம், ஜெயக்குமாா், உதவி மின் பொறியாளா்கள் மாணிக்கராஜ், பூசைராஜ், கிரிஜா, ஆறுமுகப்பெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆலங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதிய தொழிற்சாலைகளும், புதிய மின் இணைப்புகளும் கூடுதலாக விண்ணப்பம் அளித்தாலும் மின் இணைப்பு உடனடியாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

மோடியின் வருகை மணிப்பூரில் அமைதிக்கு வழிவகுக்கும்! - முன்னாள் முதல்வர் பைரன் சிங்

மணிப்பூரில் பிரதமர் மோடி!

செப். 27-ல் பிரதமர் மோடி ஒடிசா பயணம்!

இந்தியா - பாகிஸ்தான் உள்பட 7 போர்களை நிறுத்தினேன்; நான் தீர்க்காத ஒரே போர் இதுதான்! - டிரம்ப்

மோடியின் மணிப்பூர் பயணம் "கேலிக்கூத்தானது": ஜெய்ராம் ரமேஷ் தாக்கு

SCROLL FOR NEXT