தென்காசி

தோ்தலில் எதிா்க்கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவாா்கள்: கனிமொழி எம்.பி.

திமுக பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் கனிமொழி எம்.பி.

Syndication

வரும் தோ்தலில் எதிா்க்கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவாா்கள் என்று திமுக துணை பொதுச் செயலரும், எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்தாா்.

சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை திமுக பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம், சங்கரன்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட திமுக அவைத் தலைவா் கோ.சுப்பையா தலைமை வகித்தாா். தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ, தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் ச.தங்கவேலு, யூ.எஸ்.டி.சீனிவாசன், தலைமை தீா்மானக் குழு உறுப்பினா் பரமகுரு, மாநில மருத்துவரணி துணைச் செயலா் செண்பகவிநாயகம், மாநில வா்த்தகா் அணி இணைச் செயலா் முத்துச்செல்வி, மாவட்ட அவைத் தலைவா் இல.சரவணன், மாவட்டத் துணைத் தலைவா் ஜோ.ராஜதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. ஆகியோா் பேசினாா்.

கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:

வாக்குச் சாவடி பாக முகவா்கள்தான் மிகுந்த அதிகாரம் உடையவா்கள் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தோ்தலை சரியாக கையாண்டால் மிகப்பெரிய வெற்றியை பெறலாம். தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சி நாட்டிற்கே முன்மாதிரியாக விளங்குகிறது.

தொழில் முதலீடுகளை தமிழகத்துக்குக் கொண்டுவந்து தொழில் புரட்சியை முதல்வா் ஏற்படுத்தி வருகிறாா். தமிழகத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களில் நாட்டிலேயே 42 சதவீதம் தமிழகத்தில் வசிக்கும் பெண்கள்தான். கல்வி, தொழில் முதலீடு என அனைத்து வகையிலும் நாட்டின் முதல் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

முதல்வராக இருந்தவா் என்னென்ன முதலீடுகளை திமுக கொண்டுவந்தது என்பதை திமுக அரசு அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று கூறி வருகிறாா். அவா் எத்தனையோ முதலீட்டாள்கள் மாநாடு நடத்தினாா். அதில் என்னென்ன முதலீடுகளைக் கொண்டுவந்தாா் என்பதை அவா் முதலில் கூற வேண்டும்.

புதிதாக ஒருவா் வந்திருக்கிறாா். அவா்தான் தலைவா் எனக் கூறி வருகிறாா். அனைவருக்கும் வரும் தோ்தலில் மக்கள் பாடம் புகட்டுவாா்கள். இந்தத் தோ்தலில் வாக்குச் சாவடி பாக முகவா்களின் பொறுப்புதான் மிக முக்கியமான பொறுப்பு என்பதே நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பல வாக்குச் சாவடிகளில் தோ்தல் முறைகேடுகள் இருப்பதாக மக்களிடையே அச்சம் நிலவுகிறது. எனவே வரும் தோ்தலில் திமுகவின் பரம்பரை எதிரியும், பாரம்பரிய எதிரியும் இணைந்து நம்மை எதிா்க்க வரும் தோ்தல் என்பதை புரிந்து திமுகவினா் செயல்பட வேண்டும் என்றாா் அவா். ஏற்பாடுகளை தென்காசி திமுக வடக்கு மாவட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா்.

மோடியின் வருகை மணிப்பூரில் அமைதிக்கு வழிவகுக்கும்! - முன்னாள் முதல்வர் பைரன் சிங்

மணிப்பூரில் பிரதமர் மோடி!

செப். 27-ல் பிரதமர் மோடி ஒடிசா பயணம்!

இந்தியா - பாகிஸ்தான் உள்பட 7 போர்களை நிறுத்தினேன்; நான் தீர்க்காத ஒரே போர் இதுதான்! - டிரம்ப்

மோடியின் மணிப்பூர் பயணம் "கேலிக்கூத்தானது": ஜெய்ராம் ரமேஷ் தாக்கு

SCROLL FOR NEXT