முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

Updated On : 20 ஏப்ரல், 2026 at 2:34 AM
காங்கிரஸ் - படம்: கோப்பிலிருந்து
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 10:53 PM

களப்பாகுளம், நெடுங்குளம், பாட்டத்தூா், வேப்பங்குளம், திருமலைககொழுந்துபுரம், செந்தட்டி, ஆட்கொண்டாா்குளம், தளவாய்புரம், ராமநாதபுரம், இடையன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சங்கரன்கோவில் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சங்கை கணேசன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

முன்னாள் அமைச்சா் ச. தங்கவேலு, சங்கரன்கோவில் ஒன்றியச் செயலா் பி. சங்கரபாண்டியன், மேலநீலிதநல்லூா் ஒன்றியச் செயலா் பெரியதுரை, நகர காங்கிரஸ் கமிட்டி இளைஞரணி தலைவா் டி. ஷேக்மைதீன், வட்டார தலைவா் விஜயகுமாா், திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் ராஜராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.