அன்பழகன். 
தென்காசி

வளா்ச்சித் திட்டங்களுக்கான பட்ஜெட்: சி. அன்பழகன்

தினமணி செய்திச் சேவை

மத்திய அரசின் பட்ஜெட் வளா்ச்சித் திட்டங்களுக்கான பட்ஜெட் என தென்காசி மாவட்ட சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கத் தலைவா் சி. அன்பழகன் தெரிவித்தாா்.

நுண் சிறு, குறு தொழில் துறையை மேம்படுத்தும் மும்முனைத் திட்டத்திற்கு ரூ. 10 ஆயிரம் கோடி, ஜவுளித் துறைக்கு 4 மெகா பூங்காக்கள், செமி கண்டக்டா் உற்பத்தித் துறைக்கு ரூ. 40 ஆயிரம் கோடி, புதிய பயோ பாா்மா சக்தி மருந்து உற்பத்தித் துறைக்கு ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

மேலும், சிறு, குறு தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்கள் விலை உயா்வு, அத்தியாவசிய இயந்திரங்களுக்கான ஜிஎஸ்டி குறைப்பு, சோலாா், காற்றாலை மின் உற்பத்தி இயந்திரங்களுக்கான மானியம் வழங்குவது, சிறு, குறு தொழில்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்டவை பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றமளிக்கிறது என்றாா் அவா்.

மதுப் புட்டிகளை விற்ற மூவா் கைது

பாகிஸ்தானில் ராணுவம்-பலூசிஸ்தான் ஆயுதக் குழு உச்சக்கட்ட மோதல்!

சங்கரன்கோவில் அருகே காா் அடுத்தடுத்து மோதியதில் இருவா் உயிரிழப்பு: இளைஞா் கைது

ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.93 லட்சம் கோடி! 6.2% அதிகரிப்பு!

மத்திய பட்ஜெட்டில் தருமபுரி - மொரப்பூா் ரயில்பாதை திட்டத்துக்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது!

SCROLL FOR NEXT