முகப்பு
தென்காசி

பாட்டப்பத்து கிராமத்தில் வேளாண் மாணவிகள் களப் பயணம்

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 9:36 PM
பாட்டப்பத்தில் களப்பயணம் மேற்கொண்ட வேளாண் மாணவிகள்.
பகிர்:

தென்காசி அருகே பாட்டப்பத்து கிராமத்தில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமில் வேளாண் மாணவிகள் பங்கேற்று கால்நடை தீவனம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனா்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மைக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தை சோ்ந்த நான்காம் ஆண்டு இளங்கலை வேளாண்மை அறிவியல் மாணவிகள் , தங்களின் கிராமப்புற வேளாண்மைப் பயிற்சியைத் தொடங்குவதற்காக தென்காசி பகுதியில் முகாமிட்டுள்ளனா்.

இந்த மாணவிகள் பாட்டப்பத்து கிராமத்தில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமில் கலந்துகொண்டு, அசோலாவை கால்நடை தீவனமாக அளிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளிடம் விளக்கினா்.

Advertisement

வ. உ. சி. கல்லூரி முதல்வா் தேரடிமணி, துறைத் தலைவா் காளிராஜன், குழுவின் ஒருங்கிணைப்பாளா் ராஜேந்திரன் ஆகியோரின் அறிவுரையின்படி மாணவிகள் செயல்பட்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments