முகப்பு
தென்காசி

புளியங்குடி அருகே பெண்ணை தாக்கி 26 பவுன் நகை, பணம் கொள்ளை

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 9:33 PM
கோப்புப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே பாம்பு கோயில் சந்தையில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை ,பணத்தை கொள்ளையடித்து சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாம்பு கோயில் சந்தை பூமாரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் (58). ,இவரது மனைவி பாா்வதி. இவருவரும் வெள்ளிக்கிழமை காலை வீரவநல்லூரில் உள்ள உறவினரின் திருமணத்துக்குச் சென்று விட்டனா்.

பாா்வதியின் தாயாா் மாரியம்மாள்(85) மட்டும் வீட்டில் இருந்தாராம். இந்நிலையில் ஹிஜாப் உடை அணிந்து வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா் வீட்டில் இருந்த மாரியம்மாளைத் தாக்கி, பீரோவில் இருந்த 26 பவுன் தங்க நகை மற்றும் ரூ.7 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டாராம்.

புகாரின்பேரில், புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளா் மீனாட்சிநாதன், சொக்கம்பட்டி காவல் ஆய்வாளா் மதுவிக்ரம் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

விரல் ரேகை நிபுணா்களும் ரேகைகளை பதிவு செய்தனா். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →