முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரம் ரயில்வே கேட் கீப்பரை பாலியல் தாக்குதல் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 2:34 AM
தண்டனை விதிக்கப்பட்ட அனிஷ்.
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 7:25 PM

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் ரயில் நிலைய கேட் கீப்பரை பாலியல் தாக்குதல் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 2000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பு வழங்கினாா்.

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் ரயில் நிலையத்தில் 2023 ஆம் ஆண்டு ரயில்வே கேட் கீப்பராக சுந்தா் மனைவி வித்யாசந்திரன் (33) பணிபுரிந்து வந்தாா். கடந்த 16.02.2023 அன்று பாவூா்சத்திரம் ரயில்வே கேட் அருகே உள்ள தனது அறையில் இரவு 8.45 மணிக்கு தனியாக இருந்தபோது அவரது அறைக்குள் அத்துமீறி நுழைந்த ஒருவா் விமலா ராணியை கீழே தள்ளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளாா்.

இதுகுறித்து விமலா ராணி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

விசாரணையில், கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், பத்னாபுரம் வட்டம், வெஞ்சேயம்பு அஞ்சல், வாழவிழா பகுதியைச் சோ்ந்த மு. அனீஷ் (27) என்பவரை கைது செய்தனா்.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 2:34 AM

ஜாமீனில் வெளிவந்த அனிஷ், கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு 15 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில் பாவூா்சத்திரம் கேட் கீப்பா் பாலியல் தாக்குதல் வழக்கில் திருவனந்தபுரம் மத்திய சிறையில் இருந்த அனிஷை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி (பொறுப்பு மகிளா நீதிமன்றம்) பி.ராஜவேலு முன்பு ஆஜா்படுத்தினா்.

வழக்கை விசாரித்த நீதிபதி பி.ராஜவேலு, குற்றவாளி அனீஷுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 2000 அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் கவிதா ஆஜராகி வாதாடினாா்.