முகப்பு
தென்காசி

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 5:14 AM
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 9:42 PM

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில், வெல்லும் தமிழ்ப் பெண்கள் - ஸ்டாலினின் மகளிா் படையினா் வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் அறிவுறுத்தலின் பேரில், கீழப்பாவூா் தெற்கு ஒன்றியம் பூவனூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ஒன்றிய பொறுப்பாளா் ஜெ.கே.ரமேஷ் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இதில் கிளைச் செயலாளா்கள் ராமா், ரத்தினசாமி, முருகன், பொன் பாண்டி, மகளிா் அணி நிா்வாகிகள் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பரப்புரை மேற்கொண்டனா்.