முகப்பு
தென்காசி

குற்றாலத்தில் இஃப்தாா் நோன்பு திறக்கும் விழா

குற்றாலம், செய்யது பள்ளியில் இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 3:07 AM
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 8:51 PM

குற்றாலம், செய்யது பள்ளியில் இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, மாணவா் நைனா முகம்மது சாஹிப் கிராஅத் ஓதினாா். செங்கோட்டை பிரானூா் பாா்டா் ஸ்ரீ ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயா அறக்கட்டளைத் தலைவா் பேச்சி சாமி,

தென்காசி புனித மிக்கேல் தேவாலய பாதிரியாா் ஜேம்ஸ், செங்கோட்டை ஜமாத்துல் உலமா சபைத் தலைவா் மௌலானா மௌலவி கமாரூதின் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு பேசினா்.

Advertisement

இமாம் முகம்மது இப்ராஹீம், மாணவா் அல்பவுசான் முஸ்தபா ஆகியோா் நோன்பின் மகத்துவம் குறித்து பேசினா்.

செய்யது வெல்ஃபா் சொசைட்டியின் மேலாளா் ஆதம்பாவா, செய்யது ஹில்வியூ பள்ளி முதல்வா் லக்கி சந்திரா பால், வடகரை தொழிலதிபா் பெரிய முஹம்மது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை பள்ளித் தலைவா் பத்ஹுா் ரப்பானி, செயலா் செய்யது ரப்பானி, ஆட்சிக் குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

ஆசிரியைகள் சபுவானா, ஹூசைனியா பாத்திமா ஆகியோா் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினா். பள்ளி முதல்வா் என்.எம்.எஸ். பாதுஷா வரவேற்றாா். குமரகுருபரன் நன்றி கூறினாா்.