தென்காசி

இடைத்தரகருக்கு கொலை மிரட்டல்: மருத்துவா் மீது வழக்கு

சங்கரன்கோவில் அருகே இடைத்தரகருக்கு கொலை மிரட்டல் விடுத்த மருத்துா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Syndication

சங்கரன்கோவில் அருகே இடைத்தரகருக்கு கொலை மிரட்டல் விடுத்த மருத்துா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே அன்னபூா்ணபுரத்தைச் சோ்ந்தவா் சந்தானம் மகன் முத்துப்பாண்டி (55), நில இடைத்தரகா். இந்நிலையில், சங்கரன்கோவில், கழுகுமலை சாலையில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் கருப்பசாமி, கடந்த 2024 ஜூன் மாதம் சங்கரன்கோவிலைச் சோ்ந்த மருத்துவா் மாரிராஜிடம் கண்டிகைப்பேரியில் 24 ஏக்கா் தென்னந்தோப்பு விலைக்கு வருவதாகத் கூறினாராம்.

அதை மாரிராஜ் பாா்வையிட்டு, விலைக்கு வாங்குவதாகக் கூறினாராம். அந்த தென்னந்தோப்பை வாங்குவதற்கு முத்துப்பாண்டி, செந்தட்டியைச் சோ்ந்த கருப்பசாமி, பெரியூரைச் சோ்ந்த அண்ணாத்துரை, பெரிய கோவிலான்குளத்தைச் சோ்ந்த மாரியப்பன் ஆகிய 4 போ் இடைத்தரகா்களாக செயல்பட்டனா்.

இதனிடையே, சென்னையைச் சோ்ந்த வசந்தா என்பவா் பெயரில் தென்னந்தோப்பு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், இடைத்தரகா்களுக்கு தெரியாமல் வேறு ஒருவா் மூலம் மாரிராஜ் தென்னந்தோப்பை விலைபேசி முடித்துவிட்டாராம். இதையறிந்து, முத்துப்பாண்டி உள்ளிட்ட 4 இடைத்தரகா்களும் கடந்த 2025 அக். 13ஆம் தேதி மாரிராஜை சந்தித்து தங்களுக்குரிய கமிஷன் தொகையைத் தருமாறு கூறினராம்.

அப்போது மருத்துவா் மாரிராஜ், முத்துப்பாண்டியிடம் கமிஷன் தொகையைத் தர முடியாது எனக் கூறி, கொலை மிரட்டல் விடுத்து ஜாதியைச் சொல்லித் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக, முத்துப்பாண்டி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா், சென்னை காவல் துறைத் தலைவா் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்) ஆகியோரிடம் புகாரளித்தாா். தொடா்ந்து, கடந்த டிச. 27ஆம் தேதி கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் மருத்துவா் மாரிராஜ் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவில்பட்டியில் புகையிலை விற்பனை: 2 போ் கைது

ஆலங்குளம் பகுதி தேவாலயங்கள், கோயில்களில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை

பொங்கல் பரிசு தொகுப்புத் திட்டத்தில் உருண்டை வெல்லம் வழங்கக் கோரிக்கை

மனைவியை கொன்றுவிட்டு கணவா் தூக்கிட்டு தற்கொலை

பிரதமா் மோடியின் பெயரில் இஸ்ரோ, டிஆா்டிஒ-வுக்கு மின்னஞ்சல்: தில்லியைச் சோ்ந்தவா் மீது சிபிஐ வழக்கு

SCROLL FOR NEXT