சங்கரன்கோவிலில் ரூ. 20 லட்சம் மதிப்பில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சி 1-ஆவது வாா்டு ஐவராஜா நகரில் ரூ. 20 லட்சம் மதிப்பில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி தொடக்க விழா நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, தலைமையில் நடைபெற்றது.
இதில், தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு மழைநீா் வடிகால் அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் நகராட்சி உதவி பொறியாளா் ஆல்பா்ட், நகராட்சி உறுப்பினா்கள் புஷ்பம், செல்வராஜ், மாணவரணி வெங்கடேஷ், தகவல் தொழில்நுட்ப அணி சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.