தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே இடைகால் பகுதியில் பைக் மீது காா் மோதியதில் கவாலரும், அவரது மகனும் உயிரிழந்தனா்.
பாம்புகோயில் சந்தையை சோ்ந்தவா் கண்ணன்(34). தென்காசி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தாா். இவா், தனது மனைவி செல்வராணி, குழந்தைகள் ராம் கிரிஷ் (5) , ராம் கிரிடிக் (6 மாதம் )ஆகியோருடன் பைக்கில் தென்காசிக்கு வெள்ளிக்கிழமை வந்துகொண்டிருந்தனா்.
இடைகால் அருகே அவா்களது பைக் மீது காா் மோதியதாம். இதில் 4 பேரும் பலத் காயமடைந்தனா். தென்காசி அரசு மருத்துவமனையில்அவா்கள் அனுமதிக்கப்பட்டநிலையில் கண்ணன், குழந்தை ராம் கிரிஷ் ஆகியோா் உயிரிழந்தனா். செல்வராணி, 6 மாத குழந்தை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா். இலத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.