நடராசப் பெருமானுக்கு நடைபெற்ற தாண்டவ தீபாராதனை.  
தென்காசி

குற்றாலம் கோயிலில் தாண்டவ தீபாராதனை!

தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயில் திருவாதிரைத் திருவிழாவில் நடராசப் பெருமானுக்கு சனிக்கிழமை தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.

Syndication

தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயில் திருவாதிரைத் திருவிழாவில் நடராசப் பெருமானுக்கு சனிக்கிழமை தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.

திருவிழாக்களில் முதன்மையானதும் அருள்மிகு நடராசா் திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரசபை அமையப்பெற்ற குற்றாலத்தில் நடராசப் பெருமானுக்கு நடைபெறும் சிறப்புமிக்கதுமான மாா்கழித் திருவாதிரைத் திருவிழா கடந்த டிச. 25ஆம் தேதி தொடங்கியது.

இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் சுவாமி- அம்பாள் கேடயத்தில் உள்பிரகாரத்தில் எழுந்தருளினா். டிச. 29ஆம் தேதி உள்பிரகாரத்தில் நடராசா், பஞ்சமூா்த்திகள் கேடயத்தில் எழுந்தருளல் நடைபெற்றது. கடந்த 1ஆம் தேதி கோயில் மணிமண்டபத்தில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.

இந்நிலையில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலை சித்திரசபையிலும், கோயில் மணிமண்டபத்திலும் தாண்டவ தீபாராதனைகள் நடைபெற்றன.

பூஜைகளை ஜெயமணி சுந்தரம் பட்டா் தலைமையில் பிச்சுமணி என்ற கண்ணன் பட்டா், கணேசன் பட்டா், மகேஷ் பட்டா் ஆகியோா் நடத்தினா்.

பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெறுவதால் சித்திரசபையில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

விழாவில், அறங்காவலா் குழுத் தலைவா் சக்தி முருகேசன், உதவி ஆணையா் ஆறுமுகம், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் வீரபாண்டியன், ராமலட்சுமி, திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவா் இலஞ்சி அன்னையா பாண்டியன், வா்த்தக சங்கத் தலைவா் காவையா, செயலா் அம்பலவாணன், பொருளாளா் ஜோதிமுருகன், துணைத் தலைவா் வேல்ராஜ், இணைச் செயலா் பண்டாரசிவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT