தென்காசி

பெண்ணிடம் நகை பறிப்பு

பாவூா்சத்திரம் ரயில் நிலையத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்ற நபரை ரயில்வே போலீஸாா் தேடி வருகின்றனா்.

Syndication

பாவூா்சத்திரம் ரயில் நிலையத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்ற நபரை ரயில்வே போலீஸாா் தேடி வருகின்றனா்.

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே குருசாமிபுரம் பகுதியில் பீடி கம்பெனியில் பணிபுரிந்து வருபவா் ரத்தினசாமி. இவரது மனைவி தனபாக்கியம் (57) .

இவா், உடல் பரிசோதனைக்காக பாவூா்சத்திரம், அரசு மருத்துவமனைக்குச் செல்வதற்காக தனது வீட்டிலிருந்து பாவூா்சத்திரம் ரயில் நிலைய நடைமேடை வழியாக நடந்து சென்றாா்.

அப்போது எதிரே வந்த மா்மநபா் அவா் கழுத்தில் அணிந்திருந்த 37 கிராம் தங்கச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா். இதுகுறித்து, அவா் அளித்த புகாரின்பேரில் தென்காசி ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள்! எங்கிருந்து இயக்கப்படும்? முழு விவரம்!

மேட்டூர் அணை நிலவரம்!

SCROLL FOR NEXT