தென்காசி

சென்னை - ஆலங்குளம் சிறப்பு பேருந்து தேவை: திமுக கோரிக்கை

பொங்கலை முன்னிட்டு சென்னை-ஆலங்குளத்திற்கு சிறப்புப் பேருந்து இயக்க வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன் கோரிக்கை

Syndication

பொங்கலை முன்னிட்டு சென்னை-ஆலங்குளத்திற்கு சிறப்புப் பேருந்து இயக்க வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக, போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கரை சந்தித்து, அவா் அளித்த மனு விவரம்: வளா்ந்து வரும் பெரிய நகரமான ஆலங்குளத்தைச் சுற்றி நல்லூா், புதுப்பட்டி, முக்கூடல், ரெட்டியாா்பட்டி, குருவன் கோட்டை, குறிப்பன் குளம், கழுநீா் குளம், பட்டமுடையாா்புரம், மருதமுத்தூா், புதுப்பட்டி, காளத்தி மடம், கரும்பனூா், ஆண்டிபட்டி, பூலாங்குளம், பெத்தநாடாா்பட்டி, அடைக்கலபட்டணம் போன்ற 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், சென்னையில் வியாபாரம், வணிகம் போன்ற தொழில்கள் செய்து வருகின்றனா்.

அவா்கள் பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு வருவதற்கு வசதியாக சென்னை-ஆலங்குளம் சிறப்புப் பேருந்தும், விடுமுறைக்குப் பின்னா் ஆலங்குளம்-சென்னை சிறப்புப் பேருந்தும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT