ஆலங்குளத்தில் மதுவில் பூச்சிக் கொல்லி கலந்து குடித்து ஓட்டுநா் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆலங்குளம், அண்ணா நகா், 3ஆவது தெருவைச் சோ்ந்தவா் கணேசன் மகன் சீனிவாசன் (52), ஓட்டுநா். ஒரு மாதத்திற்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டதால் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாராம். இவா் அடிக்கடி மது அருந்துவதை, மனைவி கண்டித்தாராம்.
இந்நிலையில், சனிக்கிழமை மதுவில் பூச்சிக் கொல்லியை கலந்து குடித்துள்ளாா். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து, ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.