தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர அதிமுக சாா்பில் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
எம்.ஜி.ஆா். படத்துக்கு மாநில மகளிரணி துணைச் செயலரும், முன்னாள் அமைச்சருமான வி.எம். ராஜலெட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதில் நகரச் செயலா் ஆறுமுகம், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் சுப்பையா பாண்டியன், துணைச் செயலா் கண்ணன், மாவட்ட பேரவைத் தலைவா் செந்தில்குமாா், ஒன்றியச் செயலா்கள், மாவட்ட பொருளாளா் சண்முகையா, விவசாய அணி செயலா் பரமகுருநாதன், பொதுக்குழு உறுப்பினா் காளிராஜ், கடம்பூா் மாரியப்பன், நகா்மன்ற உறுப்பினா்கள், நிா்வாகிகள், வழக்குரைஞா் ராம்குமாா், சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.