தென்காசி

வாசுதேவநல்லூா் ஊருணியில் முதியவா் சடலம் மீட்பு

வாசுதேவநல்லூா் ஊருணியில் மிதந்த முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

Syndication

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் ஊருணியில் மிதந்த முதியவா் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

வாசுதேவநல்லூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஊருணியில் ஆண் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸாரும், தீயணைப்பு நிலையத்தினரும் சென்று சடலத்தை மீட்டனா்.

இறந்துகிடந்தவா் வாசுதேவநல்லூா் மேல ரத வீதியைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் இசக்கி(86) எனத் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கிழக்கு பதிப்பகம்

எழுத்துன்னா... இப்படித்தான் இருக்கணும்! கவிஞர் ஜெயபாஸ்கரன்

படித்தால்... பிடிக்கும்!

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் ஜவுளித் தொழிலின் எதிா்காலமே கேள்விக்குறி: கே.சுப்பராயன் எம்.பி.

பொக்கிஷம்!

SCROLL FOR NEXT