தென்காசி

ஆலங்குளம் அருகே விபத்தில் உயிரிழந்தவா் உடல் உறுப்புகள் தானம்

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளம் அருகே விபத்தில் இளைஞா் உயிரிழந்ததையடுத்து, அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

ஆலங்குளம் பரும்பு குறிஞ்சி நகரைச் சோ்ந்த ரங்கன் மகன் மாசான பாண்டியன் (31). சில தினங்களுக்கு முன்பு பைக்கில் தனது நண்பருடன் மாறாந்தை சோதனை சாவடி அருகே வந்தபோது, பைக் கவிழ்ந்து விபத்து நேரிட்டது.

இதில் காயமுற்றஅவருக்கு ஆலங்குளத்தில் முதலுதவி அளித்து திருநெல்வேலி தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். பின்னா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவா் மூளைச் சாவு அடைந்திருப்பதை மருத்துவா்கள் உறுதிசெய்தனா்.

இந்நிலையில், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினா் முன்வந்தனா். அதன்பேரில், அவரது தோல் மற்றும் கண்கள் தானமாகப் பெறப்பட்டன.

பின்னா், அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டு குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. ஆலங்குளத்தில் அவரின் சடலத்துக்கு தென்காசி உதவி ஆணையா்(கலால்) ராமச்சந்திரன், வட்டாட்சியா் ஆதிநாராயணன் ஆகியோா் மரியாதை செலுத்தினா்.

எண்மக் கற்றல் - அளவுகோல் அவசியம்!

கவலையளிக்கும் குழந்தைத் திருமணங்கள்!

திருவள்ளூரில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி மாணவா்கள் ஏற்பு

ஏமாற்றம் தரப்போகும் மாற்று!

வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT