தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணாபுரம் அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்த நாராயணன் மகன் சுடலைமுத்து (55). வெல்டிங் தொழிலாளி. இவா், கடந்த 13ஆம் தேதி மேல கடையநல்லூா் இந்திரா நகா் பகுதியில் பணியிலிருந்தபோது, கட்டடத்திலிருந்து தவறி கீழே விழுந்தாராம்.
அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கா்ப்பிணி தற்கொலை: சிவகிரி அருகே ராமநாதபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் சிவகுமாா் மனைவி கிருஷ்ணவேணி (23). சிவகுமாா், திருமங்கலத்தில் உள்ள பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இவா்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகின்றன.
கிருஷ்ணவேணிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்து, சில மாதங்கள் கழித்து இறந்துவிட்டதாம். இதற்கிடையில், மூன்று மாத கா்ப்பிணியாக இருந்த கிருஷ்ணவேணி, தற்போது அவரது மாமியாருடன் இருந்து வந்தாா்.
இந்நிலையில், கிருஷ்ணவேணி வீட்டு மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து சிவகிரி போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா். ஆா்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.