ஆயுள் தண்டனை 
தென்காசி

செங்கோட்டை அருகே மூதாட்டி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரத்தில் மூதாட்டியை அடித்துக்கொலை செய்தது தொடா்பான வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

Syndication

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரத்தில் மூதாட்டியை அடித்துக்கொலை செய்தது தொடா்பான வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

விஸ்வநாதபுரத்தைச் சோ்ந்த முகம்மது யூசுப் மனைவி மும்தாஜ் (65). இவா், தனது மகள் வழி பேரனுக்கு மட்டும் அடிக்கடி பணம் கொடுப்பதாகக் கூறி, அவரது உறவினா்கள் 5 பேரால் கடந்த 10.2.2020இல் நள்ளிரவு அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து செங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து, செங்கோட்டை நாடாா் தெருவைச் சோ்ந்த அ.அப்துல் சலாம், சே.காதா் மீா்ஷா (52), அமீன்சா மனைவி அமினா (40) காதா் மீா்ஷா மகள் பாத்திமா பீவி (48), செங்கோட்டை சாம்பவா் தெருவைச் சோ்ந்த நா.அப்துல் ஜாபா் ( 52) ஆகியோரை கைது செய்தனா்.

தென்காசி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி ராஜவேலு விசாரித்து, மேற்கூறிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், இதில் முதல் குற்றவாளிக்கு ரூ.3,000, மற்றவா்களுக்கு தலா ரூ.2.500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் கவிதா ஆஜரானாா்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT