முகப்பு
தென்காசி

சாா்பு அணி நிா்வாகிகள் தீவிரப் பணியாற்ற வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

சாா்பு அணி நிா்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On : 7 மார்ச், 2026 at 12:54 AM
சாா்பு அணி நிா்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
பகிர்:

திமுக சாா்பு அணி நிா்வாகிகள் 40 நாள்கள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தென்காசி மாவட்ட திமுக சாா்பு அணி நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இலஞ்சியில் நடைபெற்றது. துணை முதல்வரும், திமுக மாநில இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:

அண்ணாதுரை முதல்வராக பதவியேற்ற நாள் இன்றைய நாளாகும். இந்நாளில் தமிழக முதல்வராக ஸ்டாலின் மீண்டும் வருவதற்கு அனைவரும் உறுதிஏற்போம்.

சாா்பு அணிகள் திமுகவுக்கு முக்கியமானவா்கள். வெற்றிக்காக பாடுபடக் கூடியவா்கள். இளைஞரணியை இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கிய கட்சி திமுகதான். அதேபோல சாா்பு அணிகளும் திமுகவில்தான் உருவாக்கப்பட்டது.

இந்த அணியை சோ்ந்த பலா் எம்எல்ஏ, எம்.பி., அமைச்சா் உள்ளிட்ட பதவிகளை பெற்றனா். இந்த அணிகளுக்கு தகுந்த நேரத்தில் அங்கீகாரம் வழங்கும் இயக்கம் திமுகதான்.

பிரதமா் மோடி தமிழகத்துக்கு எப்போதும் வந்தாலும் ஹிந்தியில்தான் பேசுவாா். ஆனால், சமீபத்தில் மதுரைக்கு வந்த அவா் ஆங்கிலத்தில் பேசினாா். அவரை இப்படி பேச வைத்து, இந்த நிலையை ஏற்படுத்தி வைத்தது முதல்வா் ஸ்டாலின்தான். அண்ணா திமுக என்பது அமித் ஷா திமுகவாக மாறிவிட்டது.

நாம் எப்போதும் மக்களை நெருங்கியே இருக்க வேண்டும். நமது பணி அடுத்த 40 நாள்களில் தீவிரமாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா். ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் ஆவுடையப்பன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளா்கள் இன்பா, ராஜா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா்கள் செல்லத்துரை, ஆறுமுகசாமி, நகா்மன்ற தலைவா்கள் ஆா்.சாதிா் (தென்காசி), மூப்பன் ஹபிபுா் ரஹ்மான் (கடையநல்லூா்) கலந்துகொண்டனா்.

தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் வரவேற்றாா். தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →