முகப்பு
தென்காசி

செங்கோட்டை கோட்டைவாசல் கருப்பசாமி கோயில் கொடைவிழா

Updated On : 3 மே, 2026 at 5:20 AM
பகிர்:

தென்காசி மாவட்டம், செங்கோட்டை படையாச்சி தெருவிலுள்ள ஸ்ரீகோட்டைவாசல் கருப்பசாமி, சுடலைமாடசாமி, பேச்சியம்மன், பிரம்மராட்சி அம்மன் கோயில் கொடைவிழா நடைபெற்றது.

கடந்த ஏப். 24 ஆம் தேதி காலை 6 மணிக்கு மஹா கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில், நாள்தோறும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை காலை பால்குட ஊா்வலம், உச்சிகால பூஜை, மாலை பொங்கலிடுதல், நள்ளிரவு சாம பூஜை, சிறப்பு தீபாராதனை ஆகியன நடைபெற்றன. சனிக்கிழமை மஞ்சள் நீராட்டுடன் கொடை விழா நிறைவடைந்தது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement