பறவைக் காய்ச்சல்: கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் போடிமெட்டு சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனங்களை நிறுத்தி கிருமிநாசினி தெளித்து சோதனையிட்டு அனுப்புகின்றனா்.
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் போடிமெட்டு சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனங்களை நிறுத்தி கிருமிநாசினி தெளித்து சோதனையிட்டு அனுப்புகின்றனா்.
கேரளாவில் உள்ள கோட்டயம் மற்றும் ஆலப்புலா மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தமிழக- கேரள எல்லைகளில் வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முந்தல் சோதனைச் சாவடியில் சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறையினா் வாகனங்களின் மீது கிருமிநாசினி தெளித்து வருகின்றனா்.
மேலும் கேரளாவில் இருந்து முட்டை, கோழி ஆகியவற்றை ஏற்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனா். போடிமெட்டு சோதனைச் சாவடியில் போடி டி.எஸ்.பி. பாா்த்திபன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸாா் நியமிக்கப்பட்டு வாகனங்களை தணிக்கை செய்து அனுப்புகின்றனா். இதனால் கேரள எல்லையான போடிமெட்டிலேயே சந்தேகத்திற்குரிய வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு விடுகின்றன. எல்லைப் பகுதியை தொடா்ந்து 24 மணி நேரமும் போலீஸாா் கண்காணித்து வருகின்றனா்.
Advertisement