thinkedu

கல்விச் சிந்தனை அரங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

DIN


‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் சார்பில்  நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில்,

"கல்வி என்பது ஒரு தேசத்தின் வளர்ச்சி மற்றும் வளத்தின் அடிப்படையாகும். வெறும் உண்மைகளை அறிவதும், சூத்திரங்களைப் படிப்பதுமாக கல்வி சுருங்கிவிடக் கூடாது. அதன் முக்கிய நோக்கமே ஆக்கப்பூர்மாக சிந்திக்கவும், சிந்தனையை விரிவடையச் செய்யவும் தூண்ட வேண்டும். அனைவருக்கும் கல்வியை அளிப்பதற்கு இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியின் மூலம், சிறந்த முறையில் செயல் வடிவில் கல்வியை கொண்டு சேர்ப்பதற்கு தொடர்ச்சியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2022-இல் புதிய இந்தியா என்ற கனவை நனவாக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதற்கு கல்வி மிக முக்கியமான ஒன்று.

இந்த அரங்கில் நடைபெறவுள்ள கலந்துரையாடல்கள், நிச்சயம் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்த எட்டாவது கல்விச் சிந்தனை அரங்கில் பங்குபெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

என்ன, இனி சென்னையில் வெள்ளம், வறட்சி வராதா?

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

SCROLL FOR NEXT