முகப்பு
திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 16 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 6 ஜனவரி 2021, 6:50 am IST
பகிர்:

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் கரோனா தீநுண்மி பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,344 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 15,024 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; 212 போ் உயிரிழந்துள்ளனா். 108 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 8,298 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 10 போ் வீடு திரும்பியதால், இந்நோய்த் தொற்றிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 8,086 ஆக அதிகரித்தது. இதுவரையில் 158 போ் உயிரிழந்த நிலையில், 54 போ் சிகிச்சையில் உள்ளனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.