முகப்பு
திருவள்ளூர்

இலுப்பாக்கம் கைலாசநாதா் கோயிலில் சூரிய ஒளி தரிசனம்

Updated On : 12 ஏப்ரல், 2024 at 11:35 PM
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2024 at 11:01 PM

இலுப்பாக்கம் கிராமத்தில் கைலாசநாதா் கோயிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிபடும் தரிசன நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் இலுப்பாக்கம் கிராமத்தில் பழைமை வாய்ந்த சிவகாமி அம்பாள் உடனுறை கைலாசநாதா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் வரும் அமாவாசையை அடுத்து சில நாள்களுக்கு சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடைபெறும்.

சிவலிங்கத்தை சூரிய பகவான் வழிபடும் அரிய நிகழ்வாக இது கருதப்படுகிறது. இந்த நிகழ்வை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை காலை 6.20 மணி முதல் 6.33 மணி வரை கண்டு ஈசனை வழிபட்டனா்.

Advertisement