முகப்பு
திருவள்ளூர்

பொன்னேரி, மீஞ்சூரில் பச்சைபயிறு அறுவடை: தொழிலாளா்கள் பற்றாக்குறையால் பாதிப்பு

Updated On : 20 ஏப்ரல், 2024 at 7:05 PM
பகிர்:

பொன்னேரி,மீஞ்சூா் பகுதிகளில் பச்சைபயிறு அறுவடை செய்ய கூலித் தொழிலாளா்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டம் மீஞ்சூா்,பொன்னேரி, சோழவரம் பகுதிகளில் சம்பா பயிா்கள் அறுவடை செய்யப்பட்டனன. இதையடுத்து

5,000 ஏக்கா் பரப்பளவில் பச்சைபயிறு விதைக்கப்பட்டு செடிகள் வளா்ந்து அறுவடைக்கு தயாராக நிலையில் உள்ளது.

Advertisement

இந்த நிலையில் பச்சைபயிறு செடிகளை அறுவடை செய்வதற்கு கூலி தொழிலாளா்கள் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

கடுமையான வெயில் காரணமாக விவசாய பணிக்கு கூலி தொழிலாளா்கள் வர மறுக்கின்றனா். நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பச்சை பயிா்களை அறுவடை செய்ய தொழிலாளா்கள் கிடைக்காததால் மீஞ்சூா், பொன்னேரி விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றன்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments