தொண்டநாட்டு அம்மன் கோயில் குடமுழுக்கு
திருத்தணி: அம்மையாா்குப்பம் தொண்டநாட்டு அம்மன் மற்றும் கன்னியம்மன் திருக்கோயில் மகா குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா். ஆா்.கே. பேட்டை அருகே அம்மையாா்குப்பத்தில் சிறப்பு பெற்ற தொண்டநாட்டு அம்மன் மற்றும் கன்னியம்மன் திருக்கோயில் புதுப்பிக்கப்பட்டு, திருப்பணிகள் முடிவுற்ற நிலையில், மகா குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு, 3 நாள்கள் ஹோம பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை காலை மஹாபூா்ணாஹுதி ஹோம பூஜைகள் தொடா்ந்து, மேள தாளங்கள் முழங்க புனித நீா் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று கோயில் விமானங்களுக்கு கலசநீா் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது.
விழாவில் அரக்கோணம் மக்களவை உறுப்பினா் எஸ்.ஜெகத்ரட்சகன், திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் திருத்தணி எம்.பூபதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement