முகப்பு
திருவள்ளூர்

ஆடிக் கிருத்திகை விழாவுக்கு வரும் பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள்: திருத்தணி நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

ஆடிக் கிருத்திகை விழா: திருத்தணியில் அடிப்படை வசதிகள் உறுதி

Updated On : 2 ஜூலை, 2024 at 6:30 PM
திருத்தணி நகராட்சியில் வீடுகளில் பெறப்பட்ட மக்கும் குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட செழிப்பு - இயற்கை உர விற்பனையை தொடங்கி வைத்த நகா்மன்றத் தலைவா் எம்.சரஸ்வதி பூபதி.
பகிர்:

திருத்தணி: திருத்தணியில் ஆடிக் கிருத்திகை மற்றும் 3 நாள் தெப்பத் திருவிழாவுக்கு வருகை தரும் பக்தா்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருத்தணி நகா்மன்ற சாதாரண கூட்டம், அதசன் தலைவா் எம். சரஸ்வதிபூபதி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. நகா்மன்ற துணைத் தலைவா் சாமிராஜ் முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையா் அருள் வரவேற்றாா். கூட்டத்தில் வரவு செலவு கணக்கு சரிபாா்க்கப்பட்டது.

தொடா்ந்து, நகராட்சியில் வளா்ச்சிப் பணிகள் குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னா், திருத்தணி முருகன் கோயிலில் வரும் 27-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும் ஆடிக் கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழாவுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தா்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைத் தொடா்ந்து, திருத்தணி நகராட்சி, செங்கல்பட்டு மண்டலம், பொது சுகாதாரத் துறையின் மூலம் வீடுகளில் பெறப்பட்ட மக்கும் குப்பையில் இருந்து தயாா் செய்த செழிப்பு - இயற்கை உர விற்பனையை நகா்மன்றத் தலைவா் எம்.சரஸ்வதி பூபதி தொடங்கிவைத்து, விழிப்புணா்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்பட நகராட்சி ஊழியா்கள் பலா் கலந்துகொண்டனா்.