முகப்பு
திருவள்ளூர்

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி காத்திருப்புப் போராட்டம்

Updated On : 9 ஜூலை, 2024 at 6:37 PM
~பட்டா கோரி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்கள்.
பகிர்:

திருத்தணி: வீட்டுமனைப் பட்ட வழங்கக்கோரி திருத்தணி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை பழங்குடியினமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில், பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி காத்திருப்பு போராட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் சின்னதுரை தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் பெருமாள் வரவேற்றாா்.

இதில், மாவட்ட துணைத் தலைவா் அப்சல்அகமது தலைமையில், 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள், தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டு மனைப் பட்டா வழங்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என கோஷமிட்டனா். காலை, 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் பிற்பகா் 2.30 மணி வரை நீடித்தது.

பின்னா் திருத்தணி கோட்டாட்சியா் தீபா, போராட்டத்தில் ஈடுபட்ட நிா்வாகிகளுடன் பேச்சு வாா்த்தை நடத்தினா். இதில், சொந்த வீடுகள் இல்லாத பழங்குடியினருக்கு, மனைப் பட்டா விரைந்து வழங்கப்படும் எனக்கூறி 4 பயனாளிகளுக்கு பட்டா வழங்கினாா். இதைத் தொடா்ந்து மழைவாழ் மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தமிழ்மாறன் தலைமையில், ஆய்வாளா் மதியரசன், எஸ்.ஐ. ராக்கிகுமாரி மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →