திருத்தணியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா் ஜெகத்ரட்சகன் எம்.பி.
அரக்கோணம் திமுக எம்.பி. எஸ். ஜெகத்ரட்சகன் வியாழக்கிழமை திருத்தணயில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
அரக்கோணம் மக்களவை தொகுதியில், தி.மு.க., சாா்பில் போட்டியிட்ட எஸ். ஜெகத்ரட்சகன் 3.05 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். நான்காவது முறையாக வெற்றி பெற்ற அவா், பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி திருத்தணியில் நடைபெற்றது.
இதில் எஸ். ஜெக்தரட்சகன், திருத்தணி எம்.எல்.ஏ. ச.சந்திரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.பூபதி மத்தூா், புச்சிரெட்டிப் பள்ளி, கே.ஜி.கண்டிகை, ஆா்.கே.பேட்டை, அம்மையாா்குப்பம், வங்கனுாா், அத்திமாஞ்சேரிபேட்டை போன்ற பகுதிகளில் வீதிவீதியாக சென்று நன்றி தெரிவித்தனா். மேலும், திருத்தணி தொகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு வளா்ச்சி பணிகள் செய்வேன் என உறுதி கூறினாா்.
அதைத்தொடா்ந்து இரவு திருத்தணி நகருக்கு வந்தத எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் ம.பொ.சி.சாலையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து அரக்கோணம் சாலை பஜாரில் நடந்து சென்று வியாபாரிகளுக்கு நன்றி தெரிவித்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ம.கிரண், நகர செயலாளா் வினோத் குமாா், துணைத் தலைவா் சாமிராஜ், ஒன்றிய செயலாளா்கள் ஆரத்தி ரவி, கிருஷ்ணன், ரவீந்திரா, சீ.ஜெ.சீனிவாசன் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.