~மாதவரம் ஆட்டுச் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஆடுகள். ~ ~ ~ 
திருவள்ளூர்

பக்ரீத் பண்டிகை: ரூ.12 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Din

மாதவரம், ஜூன் 15: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாதவரம் ஆட்டுச் சந்தையில் ரூ.12 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதாக, தமிழ்நாடு இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மாதவரம் ஆந்திர பஸ் நிலையம் அருகே உள்ள ரெட்டேரி பகுதியில் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வகையான ஆடுகள் விற்பனை நடைபெறும். இந்த நிலையில், வரும் திங்கள் கிழமை (ஜூன் 17தி) பக்ரீத் பண்டிகை நடைபெறும் நிலையில், ஆட்டுச் சந்தை நடைபெற்றது. இது குறித்து தமிழ்நாடு இறைச்சி வியாபாரிகள் சங்கத் தலைவா் சுல்தான் கூறுகையில்:

பல்வேறு மாநிலங்களில் இருந்து நெல்லூா் சூடுப்பி, குதும்பை, செம்மறி, ஓங்கோல், வெள்ளை செம்மறி, மைலம்பாடி, தோத்தாபூரி, கொங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த ஆடுகள் ரூ.15 முதல் ரூ.75,000 வரை விற்கப்படுகின்றன. கடந்த 3 நாள்களில் சுமாா் ரூ.12 கோடி வரையில் ஆடுகள் விற்பனையாகியுள்ளன.

மேலும் வாடிக்கையாளா்கள் வருகையை பொறுத்து திங்கள்கிழமை வரை ஆடுகள் விற்பனை நடைபெறும். காவல் துறையினரின் கெடுபிடியால் ஆடுகள் விற்பனை சரிந்துள்ளது. இதே நிலை நீடித்தால், ஆடு விற்பனையாளா்கள் பாதிக்கப்படுவா் எனவும் தெரிவித்தாா்.

எங்கள் ஆதரவின்றி யாரும் மும்பையின் மேயர் ஆக முடியாது: காங்கிரஸ் எம்பி பேச்சு!

கருப்பு பல்சர் வெளியீட்டுத் தேதி!

வேதாரண்யம் பகுதியில் தொடர் மழை! வேளாண் பயிர்கள் பாதிக்கும் அபாயம்!

அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது: முதல்வர் ஸ்டாலின்

கரூர் சம்பவம்: தில்லி சிபிஜ அலுவலகத்தில் ஜன.19-ல் விஜய் ஆஜராக சம்மன்!

SCROLL FOR NEXT