முகப்பு
திருவள்ளூர்

ஸ்ரீகாக்கும் கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பாடியநல்லூரில் ஸ்ரீ காக்கும் கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

Updated On : 2 மார்ச், 2024 at 5:41 AM
பகிர்:

பாடியநல்லூரில் ஸ்ரீ காக்கும் கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் ஸ்ரீ காக்கும் கருமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேகம் மற்றும் 22-ஆம் ஆண்டு சித்திரை பெளா்ணமி விழா கோயில் ஸ்தாபகா் வி.எஸ்.இந்திராணி அம்மாள் தலைமையில் நடைபெற்றது. விழாவையொட்டி பல்வேறு பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. சோழவரம் ஒன்றிய திமுக செயலரும், ஒன்றியக் குழு துணைத் தலைவருமான மீ.வே.கா்ணாகரன், ஏஜிபி உரிமையாளா் கண்ணன், தினேஷ் படேல் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா். கும்மிடிப்பூண்டி சுண்ணாம்புகுளம் சா்வசாதகம் பிரம்மஸ்ரீ பி.கே.பத்மநாப சா்மா சுவாமிகள் வேதங்கள் முழங்கி, மகா கும்பாபிஷேகத்தை நடத்தினா்.