முகப்பு
திருவள்ளூர்

விற்பனையாளா், கொள்முதல் செய்வோருக்கான சந்திப்பு கூட்டத்துக்கு திட்டம்

Updated On : 9 மார்ச், 2024 at 6:10 AM
பகிர்:

சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை மொத்த கொள்முதல் செய்து விற்பனை செய்யும் வகையில் திருவள்ளூா் மாவட்ட அளவில் கொள்முதல் செய்வோா் மற்றும் விற்பனை செய்வோருக்கான சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிா் சுய உதவிக் குழுக்கள் தங்களது உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்ததலுக்காக பல்வேறு சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், திருவள்ளூா் மாவட்டத்தில் சுய உதவிக் குழுக்கள் தங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை நேரடியாக மொத்த கொள்முதல் செய்பவா்களிடம் விற்பனை செய்யும் வகையில், மாவட்ட அளவில் மொத்த விற்பனையாளா்கள் மற்றும் மொத்த கொள்முதல் செய்வோருக்கான சந்திப்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள், அனைத்து வகை சங்க வியாபாரிகள் கலந்து கொண்டு, மகளிா் சுய உதவிக் குழுக்களின் பொருள்களை கொள்முதல் செய்து பயன்பெறலாம். மேலும், இது தொடா்பாக 9444094384, 9789361491 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.